This is a Vegetarian Product
M.R.P :
105
Special Price :
100 Per Kg
You Save :
5
Little millet, (Panicum sumatrense), is one of the small millets, is commonly called Samai in Tamil. Little millet is domesticated in India and distributed in India, Nepal, Pakistan, Sri Lanka, eastern Indonesia and western Myanmar.
When compared to rice, little millet’s health benefits are highly nutritious, non-glutinous and alkaline food. It is high in minerals like iron, magnesium, phosphorous and potassium. It is a smart carbohydrate with lots of fiber and low simple sugars. Little millet is a good source of protein for vegetarians.
Cook and Enjoy
The boiled grains can be mixed with vegetables for making salad, for adding crunch to your chapattis, muffins and breads. It can also be used in preparing baby food, as porridge or as a stuffing for paranthas or rolls.
Health benefits
• Detoxifies the body
• Lowers bad cholesterol levels
• Prevents onset of breast cancer
• Prevents Type-II diabetes
• Reduces high blood pressure
• Aids in treating respiratory conditions such as asthma
• Reduces the risk of gastric ulcers/cancer
• Provides relief from constipation, bloating and cramps
This is a Vegetarian Product
M.R.P :
105
Special Price :
100 Per Kg
You Save :
5
சிறுதானிய தாவரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தானியமாக கருதப்படுவது சாமை. சாமை இந்தியாவில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘Little Millet’ என அழைக்கப்படுகிறது. இந்த தானியம் உயரமாகவும் நேராகவும் 30 செ.மீ முதல் 1 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலையானது ஒரே அளவாக ஒடுங்கி நீளமாகவும் மேற்பரப்பில் சுணை போன்ற முடிகளும் காணப்படும்.
சாமை தானியத்தின் வரலாறு
சாமை தானியமானது 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தெற்கு ஆசியக் கண்டத்தில் தோன்றியது. இந்தியாவில் உருவான இத்தானியம் இந்தியன் மில்லட் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பல பிரதேசங்களில் கி.மு காலத்திலிருந்தே இந்த தானியம் பயிரிடப்பட்டு வந்துள்ளது. மேலும் இத்தானியம் மக்களின் முக்கிய உணவாக இருந்ததாக பண்டைய தழிழர்களின் கல்வெட்டுகளிலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாலும் கூறப்படுகிறது. தற்போது இது பரவலாக இந்தியா, இலங்கை, நேபாளம், மலேசியா, மேற்கு மியன்மார் ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது.
சாமை-ல் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.
சாமையின் மருத்துவ குணங்கள்
உடலுக்கு வலிமை தரும். இதில் உள்ள அதிகப்படியான கால்சியம் காரணமாக எலும்புகள் வலு பெறுகின்றன. மேலும் உடலின் தசைகளையும் வலிமை பெறச் செய்கிறது.
விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்
சாமை காய்ச்சலினால் ஏற்படும் நாவறட்சியை போக்கும். வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். ஆண்களின் இனப்பெருக்க விந்தணு உற்பத்திக்கும், ஆண்மைக் குறைவையும் நீக்கும். தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தும்.
இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்
சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம். இதனால் இரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது. உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் சாமை மிகவும் இன்றியமையாதது.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்
அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் சாமை. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவர முக்கிய பங்கு வகிப்பது நார்சத்து. இதனை உணவாக உட்கொள்ளும் போது சர்க்கரை நோயினை கட்டுப்படுத்தும், மேலும் ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயை வராமல் தடுத்திடும்.
மலச்சிக்கலை போக்கும்
மலக்கழிவுகள் உடலிருந்து சரியாக வெளியேறவிட்டால் பல்வேறு நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். சாமையை உணவோடு சேர்த்து கொண்டால் நோய்களுக்கெல்லாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும். இது மட்டுமல்லாமல் வயிற்றுக் கோளறுகளையும் சரி செய்யும்.
எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்
சாமையில் உள்ள இயற்கையான சுண்ணாம்பு சத்தானது எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும், எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகள் வலிமைபெறவும் உதவுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்றது
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, தடிமன், ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொந்தரவுகளை சாமை உணவுகள் சரி செய்யும். இதில் உள்ள ஃபோலிக் அமிலம், மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கும். இதில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களைவிட அதிகம் என்பதால் குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நல்ல உடல் வலிமையை தரும்.
மாரடைப்பு வராமல் தடுக்கும்
சாமையில் உடலுக்கு நன்மை தரும் கொழுப்புகள் அடங்கியுள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து, மாரடைப்பு வராமல் தடுக்கும்.
இதில் அதிக புரத சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த தானியத்தின் மாவு மூலம் சாமை முறுக்கு, சாமை சோறு, சாமை இடியாப்பம், சாமை புட்டு, சாமை ரொட்டி, கேக், பிஸ்கட் என்று பலவிதமாக செய்து சாப்பிடலாம்.
இந்த நவீன காலத்தில் அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை உண்பதைத் தவிர்த்து இம்மாதிரியான பாரம்பரிய தானியங்களில் செய்த உணவினை உட்கொள்ளும் போது உடல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
We are here to help you
We are always here to help you.